search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடியரசு தினம்"

    குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் பணியாற்றும் 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை மத்தியஅரசு வெளியிட்டுள்ளது. #PresidentAward #TNPolice #CentralGovernment
    சென்னை:

    குடியரசு தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் தகைசால் பணி மற்றும் பாராட்டத்தக்க பணிக்காக 23 பேருக்கு ஜனாதிபதி விருது வழங்கப்படுகிறது. இதுபற்றிய அறிவிப்பை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. அதன்விவரம் வருமாறு:-

    தகைசால் பணிக்காக திருச்சி சிறப்பு புலனாய்வு பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பி.கோவிந்தசாமியும், ஈரோடு சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இ.சொரிமுத்துவும் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள்.

    பாராட்டத்தக்க பணிக்காக 21 பேர் ஜனாதிபதி விருது பெறுகிறார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

    1. மகேஸ்வரி - தென்சென்னை இணை போலீஸ் கமிஷனர்

    2. காமினி - ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.

    3. சாந்தி - போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு போலீஸ் அகாடமி, சென்னை

    4. அசோக்குமார் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம், சென்னை

    5. ராஜேந்திரன் - கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சிறப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சென்னை

    6. கேசவன் - துணை போலீஸ் சூப்பிரண்டு பாதுகாப்புப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

    கனகராஜ் ஜோசப்

    7. தேவராஜ் - சென்னை பல்லாவரம் உதவி போலீஸ்

    கமிஷனர்

    8. வெற்றிச்செழியன் - போலீஸ் உதவி கமிஷனர், திருவல்லிக்கேணி, சென்னை

    9. கனகராஜ் ஜோசப் - சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர்

    10. சங்கர் - துணை போலீஸ் சூப்பிரண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை, சென்னை

    11. ஆறுமுகம் - உதவி தளவாய், தமிழ்நாடு சிறப்பு காவல்படை, 3-ம் அணி, ஆவடி

    12. சங்கரசுப்பிரமணியன் - இன்ஸ்பெக்டர், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை

    13. ஜான் விக்டர் - போலீஸ் இன்ஸ்பெக்டர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, பொன்னேரி

    14. கணேசன் - போலீஸ் இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, காஞ்சீபுரம்

    சப்-இன்ஸ்பெக்டர்கள்

    15. ஜனார்த்தனன் - போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை

    16. உலகநாதன் - சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், பாதுகாப்புபிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை சென்னை.

    17. முத்துராமலிங்கம் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, ராமநாதபுரம்

    18. சீனிவாசன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

    19. குணாளன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு தலைமையிடம் சென்னை

    20. புருஷோத்தமன் - சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், லஞ்ச ஒழிப்புப்பிரிவு, சென்னை

    21. பாஸ்கரன் - போலீஸ் ஏட்டு, சிறப்புப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை, சென்னை.#PresidentAward #TNPolice #CentralGovernment
    நாளை குடியரசு தினம் கொண்டாடப்படுவதையொட்டி தமிழக அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Republicday
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

    இன்று நாம் சுவாசிக்கும் சுதந்திரக்காற்றை நமக்கு பெற்றுத்தந்த தேசத் தலைவர்களின் தியாகங்களை என்றென்றும் போற்றி நினைவுகூருவோம். இந்நாளில் மதவாத சக்திகளை ஒடுக்கி, ஜனநாயகத்தைக் காக்க பாசிச, ஊழல், மத்திய-மாநில ஆட்சிகளை வீழ்த்திட புதிய இந்தியாவை உருவாக்கிட இந்நாளில் சபதமேற்போம். இந்திய மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்:-

    அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை ஒவ்வொருவரும் முழுமையாக பெறுவதற்கு தடையாக இருப்பது தவறான பொருளாதார கொள்கை, அனைத்து மக்களையும் அரவணைத்துச் செல்லாத மனப்பாங்கு ஆகியவைகளே இந்திய தேசமும் இந்திய திருநாட்டு மக்களும் தொட வேண்டிய சிகரத்தை இன்னும் தொடவிடாமல் தடுக்கும் பெரும் தடைகளாக இருந்து வருகின்றன. இத்தடைகள் எல்லாம் இனி உடையட்டும். வளமும், வளர்ச்சியும் பொருளாதார ஏற்றமும் சமூக நல்லிணக்கமும் தழைத்து சிறந்திட குடியரசு தின நன்னாளில் உறுதி ஏற்போம்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இந்திய தேசத்தின் பெருமைமிகு மாண்பும், வரலாறும் தாங்கி நிற்கும் ஒருமைப்பாட்டிற்கும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் அடித்தள ஆணிவேரையும் எந்த சூழலிலும் எவராலும் அசைக்க முடியாது என்பதை இந்தியராகிய நாம் அனைவரும் உறுதியோடு எடுத்துரைக்க வேண்டும். உலகெங்கும் உள்ள இந்தியர்களுக்கும், இந்திய மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

    மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

    நாட்டைப் பிளக்கும் பாசிசம், சமூக அமைதியை சீர்குலைக்கும் சாதியம், நாட்டைச் சுரண்டும் ஊழல் ஆகியவற்றை வேரறுக்கவும் இந்தியர் அனைவரும் ஜனநாயக வழியில் ஒரே அணியில் திரள வேண்டும். குடியரசு தினத்தில் நமது நாட்டின் அரசியல் அமைப்பு சட்டம் வரையறுத்துள்ள அறநெறிகளை வலுப்படுத்தவும், பாதுகாக்கவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.

    ‘‘பாரத நாடு பழம்பெரும் நாடு’’ என்றாலும் பழமையும், புதுமையும் சம விகிதத்தில் கலந்து காணப்படுவதால், வெளிநாட்டவர்கள் இந்தியாவிற்கு பயணம் செய்து இந்திய கலாசாரத்தை கண்டு அதிசயித்து தங்களை அக்கலாசாரத்தில் இணைத்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

    என்.ஆர்.தனபாலன்

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தரும் குடியரசு தின வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளனர். #Republicday


    ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து திருக்காரவாசலில் குடியரசு தினத்தன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார். #PRPandian

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுக்கா கரியாப்பட்டினத்தில் விவசாயிகள்- வர்த்தகர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழக காவேரி விவசாய சங்க மாநில தலைவர் பி.ஆர். பாண்டியன் கலந்து கொண்டார்.

    கூட்டம் முடிந்த பிறகு பி.ஆர்.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டம் திருகாரவாசல் முதல் நாகை மாவட்டம் கரியாப்பட்டினம் வரை ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஏல அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மக்களுக்கு துளியும் பயன் இல்லாத இந்த திட்டத்தை வருகிற ஜனவரி மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நடைபெறுகின்ற பாராளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்.

    அவ்வாறு செய்யாவிட்டால் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்று திருவாரூர் மாவட்டம் திருகாரவாசலில் விவசாயிகள், வர்த்தகர்கள், மீனவர்கள் அனைத்து கட்சியினருடன் சேர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும். இதற்கு முன்பாக வருகின்ற 22-ந் தேதி விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்த்து இரு மாவட்டங்களிலும் பிரச்சாரம் செய்யப்படும்.

    மேலும் ஜனவரி 26-ந் தேதி நடைபெறும் கிராம சபா கூட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்த உள்ள கிராமங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #PRPandian

    டெல்லியில் குடியரசு தின விழா ஒத்திகை நடந்தபோது, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்ட பெண்ணை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். #Republicday #womanarrested
    புதுடெல்லி:

    டெல்லியின் இந்தியா கேட் பகுதியில் இன்று குடியரசு தின விழாவிற்கான ஒத்திகையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அப்போது ஒரு பெண், உயர் பாதுகாப்பு நிறைந்த அந்த பகுதிக்குள் நுழைந்து, ‘பாகிஸ்தான் வாழ்க’ என முழக்கமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.



    மனநலம் பாதிக்கப்பட்டதாக  நம்பப்படும் அந்தப் பெண் ஹைதராபாத்தில் உள்ள நிஜாமாபாத் எனும் இடத்தை சேர்ந்த சுல்தானா  என கண்டறியப்பட்டுள்ளது. அமர் ஜவான் ஜோதிக்குள் நுழைய முயன்ற அவரை, டெல்லி  காவல்துறையினர் கைது செய்து பாராளுமன்ற வீதி போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    சுல்தானா, மும்பையில் தனது உறவினர்களை சந்திக்க இரண்டு நாட்களுக்கு முன்னர் நிஜாமாபாத்தில் இருந்து புறப்பட்டுள்ளார். ஆனால் வழிதவறி டெல்லிக்கு வந்துள்ளார் என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்தப் பெண்ணை மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவ பரிசோதனையில் அந்த பெண்ணுக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவரை, காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    நிஜாமாபாத்தில் இருந்து புறப்படும்போது, யாரிடமும் சொல்லாமல் வந்ததாகவும், இதனால் அவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

    சுல்தானாவிடம் இருந்து சந்தேகத்திற்குரிய எந்த பொருளும் கைப்பற்றப்படாததால், அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Republicday #womanarrested
    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.சி.க்களுக்கு ரெயிலில் இலவச பயணம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. #TNAssembly
    சென்னை:

    தமிழக சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்ட சட்டமசோதாவில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் கலந்து கொள்வதற்காக முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்.எல்.சி.க்கள் அவர்கள் வசிக்கும் இடத்தில் இருந்து சென்னைக்கு செல்ல ரெயிலில் 2 அடுக்கு ஏசி பெட்டியில் (படுக்கை வசதி) பயணம் செய்யவும் அவர்கள் திரும்பி செல்வதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதற்கு ஏற்ப தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கும் சட்டத்தை திருத்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly

    2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். #PMModi #RepublicDay #Trump
    புதுடெல்லி:

    ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி பதவியேற்றவுடன், அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். அதன்படி, கடந்த 2015-ம் ஆண்டு அப்போது அமெரிக்க அதிபராக இருந்த ஒபாமாவை குடியரசு தின சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.



    அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    மோடியின் இந்த அழைப்பு தொடர்பாக இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என ட்ரம்ப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #PMModi #RepublicDay #Trump
    ×